சித்துக்காடு
பெயரிலே இருக்கின்றது இப்பொது நாம் பார்க்க விருக்கின்ற இறை ஸ்தலம் சித்தர்கள் வாழ்ந்த காடு.இன்னமும் அரூபமாக இருக்கின்ற காடு.சென்னை பூந்தமல்லியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த சிவன் மற்றும் பெருமாள் கோவில்கள்.நம்மிடம் இந்த இரண்டு கோவில்களின் சிறப்பு பற்றி ஏற்க்கனவே குறிப்புகள் இருந்ததால் இங்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
இது சித்தர்கள் இருந்த இடம்,சித்தர்கள் தவம் இருந்து அதன் பலனாக இங்கு பரம்பொருள் தாத்திரீஸ்வரர் என்ற பெயருடன் சிவன் கோவிலிலும்,ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் என்ற பெயருடன் தனிக்கோவில் கொண்டு எம்பெருமான் அருளாசி வழங்குகின்றார்.
இந்த இரண்டு கோவில்களின் சிறப்பே அங்குள்ள இறை மூர்த்திகளின் கருணை என்றாலும்,அதற்க்கு காரணமாக விளங்குகின்ற சித்தர்களை பற்றி நாம் பார்ப்போம்.இங்கு நாம் பதிவிடும் தகவல்கள் கோவிலின் தலவரலாறு மற்றும் கிரந்த நாடிகளில் இருந்து அறியப்பட்ட தகவல்களும் தான்.இந்த சித்த பூமயில் நடந்த நிகழ்வுகள் பற்றி முதலில் பார்போம்.
இங்குள்ள இரண்டு கோவில்களும் அனேக சித்தர்கள் உருவங்கள் தூண்களின் பாதிக்கப்பட்டு உள்ளன.இங்கு அனேக சித்தர்கள் தவமிருந்து பேரு பெற்றனர் என்பதற்கு இங்குள்ள இறை தூண்களே சாட்சி.பொதுவாக கோவில் தூண்களை நாம் சரியாக கவனிப்பதில்லை.நாம் எந்த ஒரு புராதன கோவிலின் மூலவர் விமானம் அதாவது கோபுரத்தில் உள்ள சிலை ரூபங்களை வைத்தே அந்த கோவிலின் தலவரலாறு என்ன என்பதை அறியலாம்.
அதே போல் தான் கோவில் தூண்களின் இருக்கும் சித்தர்கள் உருவம் ஏதோ பொறிக்கப்பட்டவை அல்ல.அந்த தூணில் உள்ள சித்தர்களுக்கும் அந்த கோவிலுக்கும் உள்ள தொடர்பே அது.இதை நாம் முதலில் நன்கு உணர வேண்டும்.
இங்கும் அதே போல பல சித்தர்கள் வாழ்ந்து,தவம் இயற்றி இறையை கண்டனர் என்பதே உண்மை.ஸ்தல வரலாற்றின் படி இங்கு பிரதானமாக இரண்டு சித்தர்கள் ஐயா படுக்கை ஜடாமுடி சித்தர்,ஐயா பிராண தீபிகா சித்தர் இருவரும் இங்கு உள்ள ஒரு நெல்லி மரத்தடியில் சிவ ரூபத்தை லிங்க வடிவமாக ஸ்தாபித்து வணங்கி வந்துள்ளனர்.சமஸ்கிருத மொழியில் நெல்லிக்கு தாத்திரி என்ற பெயர் உண்டு.ஆகையால் இங்குள்ள சிவ பெருமான் தாத்திரீஸ்வரர் என்ற பெயர் கொண்டார்.நறுமணம் மிக்க மலர் சோலையில் சித்தர்கள் இருந்து வழிபட்டதால் இந்த ஊர் திருமணம் என்ற பெயர் கொண்டது.இந்த சித்தர்கள் காடு இன்று சித்துக்காடு என்றும் மருவியது.
இங்குள்ள சிவன் கோவிலின் கருவறையை சுற்றி வரும் போது பல சித்தர்களின் உருவங்களை தூண்களை காணலாம்.இந்த தூண்களின் இன்றும் அவர்கள் இருந்து கொண்டு இருக்கின்றனர்.சிறிய கோவில் என்றாலும் நல்ல கட்டமைப்பு மற்றும் பழமை கொண்ட கோயில்.அதீத ஆக்கபூர்வமான அதிர்வலைகள் கொண்ட கோவில்.
இங்குள்ள நந்தியம் பெருமாள் மூக்கணாம் கையறு அற்ற நிலையில் உள்ளார்.சாந்த நிலையில் உள்ளார்.இவரது இந்த நந்தி மண்டபத்தில் ஐயா பிராண தீபிகா சித்தர் உருவம் உள்ளது.இந்த உலகிற்கு முதன் முதலில் பிராணன் உருவானது இங்குள்ள நந்தியில் இருந்து தான் என்கிறது நாடிகள்.இங்குள்ள பிராண தீபிகா சித்தரை வணங்கி தொழுது நின்றால் பிராணன் சம்பந்தபட்ட வியாதிகள் குணமாகும் என்பது உண்மை.ஆயுள் விருத்தி யாகும்.
சுவாரஸ்யமான தகவல் - நடந்த உண்மைச்சம்பவம் :
பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலின் அருகே சிவதாசன் என்ற சிறுவன் வாழ்த்து வந்தான்.மிகவும் ஏழை.மாடு மேய்த்து கொண்டிருந்தான்.ஒரு நாள் பசியால் வாடியபடி இருந்த சிவ தாசனுக்கு ஒரு முதியவர் ஆகாயத்தில் இருந்து அன்ன ஆகாரங்களை வரவழைத்து பசி ஆற்றினார்.இந்த நிகழ்வை ஊர் மக்கள் ஏற்கவில்லை.சிவ தாசன் பொய் சொல்வதாக நினைத்து அவனை அடித்து துன்புறுத்தினார்.இதனால் அவன் மயக்கம் உற்றான்.அவனது பெற்றோர் அவனை தேடி வரும் போது சிவதாசன் அங்கு இல்லை.அதனால் அவனது பெற்றோர் அங்குள்ள வைத்தியநாத சுவாமியிடம் முறையிட்டனர்.
பூட்டிய கதவு திறந்து கருவறையில் இருந்து சிவ தாசன் வெளிப்பட்டான்.இதை கண்டு ஊர் மக்கள் திகைப்புற்றனர்.அப்பொழுது அவனுடன் அங்கு ஐக்கியமான சித்தர்களும் வெளிப்பட்டு சிவதாசன் முற்பிறவிகளில் இங்குள்ள இறைவனுக்கு பூஜை செய்ததாகவும்,அதன் பலனாக இப்பிறவியில் அவன் சித்தனாக மாறுவான் என்றும் அசரியாக கூறினார்.அதோடு அல்லாமல் சிவதாசன் வட யாத்திரை செல்ல விருப்பதாகவும்,காக்கை வடிவும் கொண்டு அவன் இங்கு வந்து விளக்கில் உள்ள நெய்யை உண்பான் என்றும் கூறினர்.
இன்றும் இங்கு காக்கை வடிவத்திலும்,ஆந்தை வடிவத்திலும் பிரதோஷம் மற்றும் திருவாதிரை நட்சத்திர நாட்களில் பட்சிகள் வந்து உண்ணு கின்றன.இது வியப்பே.
சிவதாச சித்தரோடு மற்ற சித்தர்களும் இங்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு அவரர் வேண்டுவதை நிறைவேற்றி வருகின்றனர்.இது உண்மை.
ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள்
இந்த கோவில் சிவன் கோவில் அருகிலே உள்ளது.இரண்டு கோவில்களுக்கு அருகில் மிக பெரிய குளம்.சித்தர்கள் அடங்கிய இடம்.மிக அமைதியான அக்ரகார தார் சாலை அதை ஒட்டிய பழைய பெருமாள் கோவில்.இங்கு இறை திருநாமம் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள்.இறைவி ஸ்ரீ சுந்தரவல்லி தாயார்.பெயருக்கு ஏற்றார் போல அத்துணை சுந்தரம் இருவரிடமும்.நல்ல அமைதியான கோவில்.காற்றின் ஓசையை தவிர ஒரு சப்தமும் இங்கு இல்லை.அழகி வடிவமைப்பு.கோவிலை சுற்றி வரும் போது அத்துணை இறை சக்திகளும் இருப்பதை உணரலாம்.நல்ல வாஸ்து முறைப்படி அமைத்துள்ள கோவில்.ஆகவே இறை சக்திகள் நமது உடலில் பரவுவது நிச்சயம்.அதற்க்கு நாம் ஒரு நிலை கொள்வது முக்கியம்.
இங்கும் சித்தர்கள் உருவங்கள் தூண்களில் உள்ளது.இங்கு ஒரு விசேச சித்தர் வாசம் செய்கின்றார்.அவர் கருடக்கொடி என்ற விருட்சக் கொடி சித்தர்.ஸ்ரீ கருட பகவானை தம் கொடியில் தாங்கியதால் கருடக்கொடி சித்தர் என்றும் பல்வேறு விருட்சங்களை கொடியாகக் கையில் ஏந்தியவாறு இருப்பதால் இவர் விருட்சக் கொடி சித்தர் என்றும் அழைக்கப்பட்டுகின்றார்.
இவர் இங்கு உள்ள ஆண்டாள் சன்னதியின் முன்மண்டபத்தில்,அம்பாளுக்கு வலப்புறம் உள்ள தூணில் ஜீவ சமாதி கொண்டு அருள் பாலிக்கின்றார்.இவரது சிறப்பு எத்தகைய கண் சம்பந்தப்பட்ட குறைகளையும் நிவர்த்தி செய்து தருகின்றார்.
இவரை இன்றும் கண் சம்பந்தப்பட்ட குறை உள்ளவர்கள் தரிசித்து பயன் பெறுகின்றனர்.சனிக்கிழமை நாட்களில் காலை வேளை இவருக்கு இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றது.
இந்த இரண்டு கோவில்களுமே அத்துணை சித்தர்களது சிறப்புகளை கொண்டது.அருகில் உள்ளவர்கள் ஒரு முறையாவது இந்த கோவில் சென்று சித்தர்களது ஆசி பெற முயலுங்கள்.
தூணில் உள்ள சித்தர்களது புகைப்படங்கள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எப்படி செல்வது :
அருள்மிகு
தாத்திரீஸ்வரர் கோவில்,
திருமணம் கிராமம்,
பட்டாபிராம் வழி,
வயலா நல்லூர் போஸ்ட்,
சித்துக்காடு.
சென்னை பூந்தமல்லியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து செல்லும்போது சர்வீஸ் ரோட்டில் இடது புறம் சென்றால் உள்ளது சித்துக்காடு.
கோவில் புகைப்படங்கள் :
 |
ஸ்ரீ தாத்திரீஸ்வரர் கோவில் முன் கோபுரம் |
 |
கோவிலின் உள்ளே இருந்து கோபுரத்தின் தோற்றம் |
 |
கோவிலை சுற்றும்போது |
 |
கோவில் மூலவர் விமானம் |
 |
மேகங்களுடன் கோவிலின் விமான தோற்றம் |
 |
நெல்லி விருட்சம் - ஸ்தல விருட்சத்தை தொழ வேண்டும். |
 |
சுற்றி வர நல்ல இடைவெளி விட்டு கட்டப்பட்ட கோவில் |
 |
கோபுரங்கள் |
 |
மரத்தின் அடியில் உள்ள சிலை |
 |
ஸ்தல விருட்சம் - நெல்லி |
 |
கோவில் கோபுரங்கள் |
 |
வெளி மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் சித்தர் உருவம் |
 |
தூணில் சித்தர்கள் தவநிலை தோற்றம் |
 |
நின்ற,அமர்ந்த,தலைகீழ் நிலையில் சித்தர் உருவம் தூண்களில் |
 |
நின்ற,அமர்ந்த,தலைகீழ் நிலையில் சித்தர் உருவம் தூண்களில் |
 |
தூணில் உள்ள உருவம் |
 |
சித்தரின் யோகநிலை |
 |
சித்தரின் யோகநிலை |
 |
அமர்ந்த நிலையில் சித்தர் |
 |
நடன நிலை |
 |
யோக நிலையில் மற்றொரு தூணில் |
 |
தூண் சிற்பம் |
 |
பூஜை செய்வது போல சித்தர் ஒருவர் |
 |
வித்தியாசமான தோற்றம் |
 |
கோவில் குளம்.பல சித்தர்கள் இந்த குளத்தில் ஐக்கியம் ஆனதாக சொல்லபடுகின்றது.மிக ரம்மியமானது சூழல். |
 |
சிவன் கோவிலில் இருந்து பெருமாள் கோவில் செல்லும் வலி.தெப்பக்குளத்தை ஒட்டியவாறு.பெருமாள் கோவில் கோபுரம் தெரிவதை காணலாம். |
 |
சிவன் கோவில் கோபுரம் பெருமாள் கோவில் செல்லும் வழியில் இருந்து |
 |
ஆதவன் காட்சி. |
 |
அக்ரகார தார் சாலை வலி பெருமாள் கோவில் செல்ல - மிக அமைதியான சூழல் கொண்ட இடம்.அதிகம் வீடுகள் அற்ற பகுதி. |
 |
கோவில் கோபுரத்தின் காட்சி |
 |
கோவில் ராஜ கோபுரம் |
 |
மூலவர் ஸ்ரீ சுந்தர ராஜ பெருமாள் விமானம் |
 |
கோவிலை சுற்றி வரும்போது மரங்கள் |
 |
கோவிலை சுற்றும்போது |
 |
மூலவர் விமானம் |
 |
கோவில் கொடிமரமும் - முன் கோபுரமும் |
 |
கோபுர முன் தோற்றம் |
அடுத்த நமது யாத்திரை சித்தர் காடு கோவில் - 63 சித்தர்கள் ஒரே நேரத்தில் இறைவனின் ஸ்துல உடலில் ஐக்கியம் ஆன அற்புதம் நடந்த இடம்.சித்தர் சிற்றம்பல நாடிகள் பற்றியும் அவரது சீடர்கள் 63 பெயருடன் ஒரே நேரத்தில் ஜீவ ஐக்கியம் ஆன ஸ்தலம் சித்தர் காடு பற்றி பாப்போம்.
Comments
Post a Comment