Skip to main content

Printfriendly

Featured Post

October - 2017 (திருநெல்வேலி மாவட்ட கோவில்கள் ஸ்தல யாத்திரை)

நமது ஆலயங்கள்அறிவோம் ஆன்மீக அமைப்பு வருகின்ற October - 2017 மாதம் திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள புண்ணிய ஸ்தலங்கள் பயணம் செல்ல விருக்கின்றது.இரண்டு நாட்கள்.தேதி பின்னர் அறிவிக்கப்படும்.அனைத்தும் மிக விசேஷமான ஸ்தலங்கள்.இந்த ஆன்மீக வழிபாட்டு பயணத்தில் மிக பிரபலமான,பழமையான கோவில்கள் மற்றும் அதிகம் வெளி உலகம் அறியாத ஆனால் அதிக இறை அதிர்வலைகள் கொண்ட விசேச வரலாறுகள் கொண்ட கோவில்களும் அடங்கும். கோவில் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.பல கோவில்களின் உண்மையான வரலாறுகளும் அதன் சிறப்புகளும் ஒவ்வொரு கோவில்களில் விளக்கப்படும்.ஸ்ரீ அகஸ்தியர் தீர்த்தம்,மாத தாமிரபரணி(ஸ்ரீ லோபா முத்திரா) வில் புனித நீராடி அனைத்து இறை ஆலயங்களும் தரிசனம் செய்வோம். இந்த ஆன்மீக பயணத்தில் இரண்டு முக்கிய கோவில்கள் இடம் பெரும்.ராகு,கேது மற்றும் செவ்வாய் பகவானுக்கான சிறந்த அதிர்வலைகள் கொண்ட ஸ்தலங்கள்.இந்த கோவில்கள் அதிகம் வெளிஉலகம் அறிந்திடாத ஒன்று.ஆனால் இந்த இறை ஆலயங்களின் சிறப்பு அபரிமிதமானது. விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். புறப்படும் தேதி பின்னர் அறிவிக்

நைனாமலை - ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில்(நான்கு யுகங்களாக அருளும் பெருமாள்)

Print Friendly and PDF

கோவில் பற்றி 


இறைவன் திருநாமம் ஸ்ரீ வரதராஜ பெருமாள்

தாயார் திருநாமம் : குவலயவல்லி தாயார் 


"நைனாமலை" என்ற பெயர்க்காரணம் நயன மகரிஷி எனும் சித்த புருஷர் இங்கு தவம் செய்து பெருமாள் தரிசனம் கண்டதால் இம்மலைக்கு நைனாமலை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகின்றது.ஆகையால் நைனாசலம் என்றும் அழைக்கப்பட்டது.3500 மலை படிக்கட்டுகள் கொண்ட செங்குத்தான மலை.ஆனால் ஏறுவதற்கு நல்ல மலை சூழ்நிலை கொண்ட படிகள் அமைக்கப்பட்டுள்ளது.நாயக்கர் மன்னர்கள் காலத்தில் இங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. நடுமலை மீது ஒரு மண்டபம் அதை தொடர்ந்து ஒரு தீர்த்தக்குளம்.மலை ஏற சுமார் இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் ஆகலாம்,அவரவர் உடல் நிலை பொருத்து.

மலை மீது ஒரு தனி மண்டபம்,மிக பழமையான கல் மண்டபம்.இந்த மண்டபத்தூனில் படுக்கை ஜடா முடி சித்தர்,பிராண தீபிகை சித்தர்,குரு லிங்க சித்தர் உருவங்கள் உள்ளன.இங்கு சித்தர்கள் இன்றும்  வசிப்பதை, தவம்  செய்வதை இந்த சித்த உருவங்கள் கொண்டு அறியலாம்.இது சித்தர்கள் தவம் செய்யும் பூமி.

கல் மண்டபத்தை கடந்து செல்லும்போது ஒரு கல் படி மண்டபம்.பாறைகளில் செதுக்கப்பட்ட படிகள்.அருமை.கோவில் நுழைவாயில் அடுத்து ஒரு பெரிய மண்டபம் மற்றும் மடப்பள்ளி.அடுத்து நம்மை வரவேற்ப்பது போல என்றும் வாழும் ஏகாந்த சிரஞ்ஜீவி அனுமனின் தரிசனம்.படிகள் மீது கடந்து செல்லும் போது இடப்புறமாக பெருமாள் மற்றும் ஆண்டாள் சந்நிதி.

கோவில் உள்ளே நுழைந்த உடன் கிழக்கு நோக்கியவாறு குவலயவல்லி தாயார் சந்நிதி.கருணையின் வடிவமாக அற்புத சிலா ரூபமாக காட்சி தருகின்றார்.அன்பின்,அழகின் திரு உருவமாக அமர்ந்து அருள் வழங்குகின்றாள்.

எம் பெருமான் சந்நிதி முன்பு கருடாழ்வார் இரு கரம் கூப்பி பெருமாளை வனைங்கியபடி காட்சி.இந்த வெளி மண்டப தூணில் தான் நைன மகரிஷி் தவம் செய்வது போல உருவ பதிவு.அவருடன் வராக உருவம் உடன்.பிறகு உள்ளே சென்றால் கருவறையில் கருணையின் திரு உருவம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி தாயாருடன்.கையில் தண்டம் ஏந்திய பெருமாள்.மிக பழமையான சிற்ப வேலை கொண்ட சிலா ரூபம்.

அதி அற்புத அதிர்வலைகள் கொண்ட கருவறை.கருவறைஇன் இடது புறம் ஸ்ரீ ராமர்,மாதா சீதை,லக்ஷ்மணன் மற்றும் குழல் ஓதும் கண்ணன் சிலா ரூபங்கள்.

கொடி மரம் அருகில் நின்று பார்த்தல் கருடன் மற்றும் கோவில் தரிசனம்.கோவிலை சுற்றி வரும்போது தாயார் கருவறை மற்றும் பெருமாள் கருவறை விமானங்களை நன்கு தரிசிக்கலாம்.விமானங்கள் சுதை கொண்டு கட்டப்பட்டவை.கோவிலின் பழமையை உணரலாம்.ஸ்தல விருட்சம் நெல்லி மரம்,யுகங்கள் கடந்ததகவே தெரிகின்றது.ஸ்தல விருட்சத்தை தொழ நன்மை உண்டு.

பிற இறை சிலா ரூபங்கள் : 

மலை அடிவார ஆஞ்சநேயர்,கோவில் நுழைவாயில் உள்ள ஆஞ்சநேயர்,கருடாழ்வார்,ஸ்ரீ ராமர்,மாதா சீதா, லக்ஷ்மணன்,குழல் ஓதும் கண்ணன்.

ஸ்தல விருட்சம்  :  நெல்லி மரம் - யுகங்கள் கடந்தது.

சிறப்பு :

வடக்கு நோக்கி சூரிய நாராயணர் பயணிக்கும் காலமான உத்ராயணம்(தை மாதம் தொடங்கி ஆணி மாதம் வரை) உள்ள காலங்களில் தினமும் அதிகாலையில் சூரியன் உதயம் ஆகும் போது சூரியனின் ஒளிக்கற்றைகள் சுவாமி வரதராஜ பெருமாளின் முகத்தின் மீது விழுகின்றது.அதற்க்கு ஏற்றார் போல பெருமாள் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிந்து கொண்டிருக்கின்றார்.இந்த அற்புத காட்சியை தினமும் கண்டுகளிக்கலாம்.

மலை உயரத்தில் இருந்து பார்க்கும்பொழுது கிழக்கில் இருந்து எழுந்து வரும் சூர்யா நாராயணர் மெல்ல மெல்ல மேலே எழும்பி கருவறை இல் நின்றுகொண்டு இருக்கும் கலியுக காக்கும் கடவுளான எம் பெருமான் முகம் மீது விழும் போது,அந்த அழகு வரதராஜ  பெருமானின் புன்னகையை சூரிய நாராயனரின் பிரகாச ஒளி கொண்டு காணும்போது நமது மனதில் உள்ள இருளும் பிரகாசம் பெரும்.இதை அனுபவித்து மகிழலாம்.

இந்திர பகவான் இங்குள்ள வரதராஜ பெருமாளை அரூபமாக இடியாக வந்து வழிபடுவதாக கூறப்படுகின்றது.

நடை திறப்பு :

மாதத்தின் எல்லா சனி மற்றும் புதன்கிழமைகளில் கோவில் திறக்கப்பட்டிருக்கும்.இங்கு பிரம்மோத்சவம் மிக சிறந்த முறையில் நடைபெறும்.புரட்டாசி சனிக்கிழமைகளில் லட்சகணக்கான பக்தர்கள் வந்து இறை தரிசனம் பெறுவார்.

எப்படி செல்வது:

சேலம் to நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதன் சந்தையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நைனாமலை அடிவாரம்.மலை உள்ள ஊர் சேந்தமங்கலம்.

கோவில் தொடர்புக்கு:


சௌந்தர்ராஜ பட்டாச்சாரியார்
NO 3,பெருமாள் கோவில் தெரு,
சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டம்,
தமிழ் நாடு.Pin Code : 637 409
Phone  :  9443499854,9442397876 
email :  soundararajan26@gmail.com,vararajar2012@gmail.com 

கோவில் புகைப்படங்கள் :

மலை அடிவார ஆஞ்சநேயர்

மலை படிகள்

நடுமலையில் உள்ள மண்டபம்

நீர் ஊற்று - தீர்த்தம்

3000 படிகள் கடந்த பின்பு கோவில் தோற்றம்

பழைய பெரிய கல் பண்டபம் - சித்தர்கள் உருவம் பதிக்க பட்ட மண்டபம்

குரு லிங்க சித்தர்

பிராண தீபிகை சித்தர்

படுக்கை ஜடாமுடி சித்தர்

கல் மண்டப தோற்றம்

வராக உருவுடன் தவம் செய்யும் நைன சித்தர்

பெருமாள் சன்னதி

நைனாமலை தொடர்ச்சி  - சூர்ய பகவான் எழுந்து வரும் பாதை

கருடாழ்வார்

தாயார் சன்னதி

பெருமாள் சன்னதி விமானம் - சித்தர் உருவம்
 - s
ஒரே பாறை மீது நின்ற பெருமாளும் கோவிலும் - மலை உச்சி

நைனாமலை தொடர்ச்சி

கோவில் பிரகாரம்

கீழ் உள்ள மண்டபம்

ஆஞ்சநேயர் சன்னதி

அழகிய ஆல விருட்சம்

கோவில் முகப்பு

கோவில் வெளித்தோற்றம்

படி வழியில் உள்ள கல் மண்டபம்

கல் மண்டபம்

பாறைகள் மீது படிகள் அமைக்கப்பட்டுள்ளது

பெரிய கல் மண்டபம்

படுக்கை ஜடாமுடி சித்தர்



தரிசனம் செய்த நாள் : 09.09.2017

Comments

Popular Posts