Skip to main content

Printfriendly

Featured Post

October - 2017 (திருநெல்வேலி மாவட்ட கோவில்கள் ஸ்தல யாத்திரை)

நமது ஆலயங்கள்அறிவோம் ஆன்மீக அமைப்பு வருகின்ற October - 2017 மாதம் திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள புண்ணிய ஸ்தலங்கள் பயணம் செல்ல விருக்கின்றது.இரண்டு நாட்கள்.தேதி பின்னர் அறிவிக்கப்படும்.அனைத்தும் மிக விசேஷமான ஸ்தலங்கள்.இந்த ஆன்மீக வழிபாட்டு பயணத்தில் மிக பிரபலமான,பழமையான கோவில்கள் மற்றும் அதிகம் வெளி உலகம் அறியாத ஆனால் அதிக இறை அதிர்வலைகள் கொண்ட விசேச வரலாறுகள் கொண்ட கோவில்களும் அடங்கும்.
கோவில் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.பல கோவில்களின் உண்மையான வரலாறுகளும் அதன் சிறப்புகளும் ஒவ்வொரு கோவில்களில் விளக்கப்படும்.ஸ்ரீ அகஸ்தியர் தீர்த்தம்,மாத தாமிரபரணி(ஸ்ரீ லோபா முத்திரா) வில் புனித நீராடி அனைத்து இறை ஆலயங்களும் தரிசனம் செய்வோம்.
இந்த ஆன்மீக பயணத்தில் இரண்டு முக்கிய கோவில்கள் இடம் பெரும்.ராகு,கேது மற்றும் செவ்வாய் பகவானுக்கான சிறந்த அதிர்வலைகள் கொண்ட ஸ்தலங்கள்.இந்த கோவில்கள் அதிகம் வெளிஉலகம் அறிந்திடாத ஒன்று.ஆனால் இந்த இறை ஆலயங்களின் சிறப்பு அபரிமிதமானது.
விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
புறப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.நன்றி.

1.அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயில் (திருக்கச்சி,அத்திகிரி - காஞ்சிபுரம்) 40 வருடங்களுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளிவரும் அத்தி மர பெருமாள்

Print Friendly and PDF

கோவில் பற்றி 


இறைவன் திருநாமம் அருள்மிகு வரதராஜ பெருமாள்
                                                 தேவப்பெருமாள் பேரருளான்,தேவாதிராஜன்
                                                 அத்திவரதன் 

தாயார் திருநாமம் :   ஸ்ரீ பெருந்தேவித் தாயார்,தாயார் அரித்தரா தேவி

விமானம் : புண்ணியகோடி விமானம்

தீர்த்தம் : வேகவதி நதி,ஆனந்தசராஸ் திருக்குளம்,பொற்றாமரை குளம்

மங்களாசாசனம் செய்தவர்கள் : திருக்கச்சி நம்பிகள்,மணவாள மாமுனிஎங்கும் கோவில்களாகவும் கோவில் கோபுரங்களாகவும் காட்சி தரும் காஞ்சிபுரத்தில் உள்ள மிகப்பெரிய திவ்ய தேச கோவில்.சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட கோவில்.கோவில் மதில் சுவர்கள் விண்ணை முட்டும் உயரம்.கருவறை 40 அடி உயரத்தில் இரண்டு அடுக்குகளாக உள்ளது.கீழ் அடுக்கில் ஸ்ரீ அழகிய சிங்கப் பெருமாள்.தாயார் அரித்தரா தேவி.மேல் அடுக்கில் மூலவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் அருளை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகின்றார்.தாயார் ஸ்ரீ பெருந்தேவித் தாயார்.

பிரம்ம தேவர் செய்த யாகத்தின் பலனாக எம்பெருமான் புண்ணிய கோடி விம்மானத்தில் வந்து காட்சி தந்தார்.இந்த தலத்திற்கு அத்திகிரி என்ற பெயர் உண்டு.பிருகு முனிவர்,நாரதர்,ஆதிசேசன்,இந்திரன்,சரஸ்வதி தேவி ஆகியோர் இங்கு வந்து இறைவனை வழிபட்டு காட்சி கண்டனர்.கலயுகத்தில் ஆதிசேசன் பூஜித்த ஸ்தலம்,இன்றும் அருபமாக பூஜிக்கின்றார்.இங்குள்ள தங்கப் பல்லியை தொட்டு வனங்கினால் தோஷம்,வியாதி தீரும் என்பது ஐதீகம்.

அதிசய சிறப்பு :

இங்குள்ள அனந்தசரஸ் தீர்த்தகுளத்தில் உள்ள மண்டபத்தில் நீருக்கு அடியில் உள்ள அத்தி மரத்தால் ஆன அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ளது.40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டமே அத்திவரதர் வெளியில் எடுக்கபடுகின்றார்.குளத்தில் உள்ள நீர் முழுவதும் அருகில் உள்ள பொற்றாமரை குளத்திற்கு மாற்றபட்டு,பிறகு அத்திவரதர் சிலை வெளியில் எடுக்கப்படும்.கடைசியாக 1979 ஆம் ஆண்டு அத்திவரதர் பக்தர்களின்  பார்வைக்காக வெளியில் எடுக்கப்பட்டார்.ஒரு மண்டல காலம் தரிசனத்திற்காக வைக்கபடுவார்.இம்முறை 2019 ஆம் ஆண்டு அத்திவரதர் பக்தர்களின் பார்வைக்காக வெளி வர இருக்கின்றார்.அந்த அற்புத அத்திவரத பெருமானை காண்பது என்பது மஹா புண்ணியம்.எல்லோருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது என்பது இறைவனின் ஆசியினை பொருத்தது.

சித்திரை மாதத்தில் 15  நாட்களுக்கு சூர்ய நாராயரின் கதிர்கள் மூலவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருமுகத்தின் மீது விழும்.இங்குள்ள சக்கரத்தாழ்வார் மிக சக்தி வாய்ந்தவர்.இவர் இங்கு 7 அடி உயரத்தில் தனி சன்னிதி கொண்டு மறுபுறம் எம்பெருமானின் நரசிம்மர் உருவம் தாங்கி கம்பீரமாக காட்சி தருகின்றார்.இங்கு நடக்கும் கருட சேவை உலக புகழ் வாய்ந்தது.

குறிப்பு :

இங்குள்ள அத்திவரதரை வணங்கினால் சந்திர பகவானின் பரிபூரண அருள் கிட்டும்.நீர் தொடர்பான கண்டங்கள் இருந்தாலும் விலகி ஓடும்.இது உண்மை,சத்தியம்.

கோவில் புகைப்படங்கள் :

கோவில் முன் கோபுரம்
பிரமாண்ட கோவில் நுழைவாயில் கதவு
கோவில் கொடிமரம்
சிற்ப மண்டபம்
அதிகாலை கோவிலின் அற்புதக்காட்சி
ராஜ கோபுரம்
அத்தி வரதர் நீருக்கு அடியில் வசிக்கும் குளத்தின் மண்டபம்(40 வருடங்களுக்கு ஒரு முறை அத்தி மரத்தால் ஆன அத்திவரதர் சிலையை வெளியே எடுத்து ஒரு மண்டலம் பூஜை செய்கிறார்கள்.பிறகு மீண்டும் இந்த குளத்தில் உள்ள மண்டபத்தின் அடியில் வைக்கப்படுகின்றார்.40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நம்மால் அத்திவரதரை தரிசனம் செய்ய முடியும்)

அத்தி வரதர் உறங்கும் அனந்தசரஸ் திருக்குளம் - கோபுர தரிசனம்
குளத்தின் நடு மண்டபம்
முழு நீள குளத்தின் தோற்றம்
சக்கரத்தாழ்வார் சன்னதி செல்லும் வழி
குளத்தின் அருகில் உள்ள சன்னதி
தென்னை மரங்களின் ஓசை அதிகாலையில்
குரு லிங்க சித்தர்
தெப்பக்குளம் அருகில் உள்ள மண்டபம்
சித்தர் உருவம் கோவிலின் வெளி மண்டபத்தில்
சித்தர் உருவம் கோவிலின் வெளி மண்டபத்தில்
சித்தர் உருவம் கோவிலின் வெளி மண்டபத்தில்
தூணில் உள்ள சிற்ப்பங்கள்
குதிரையில் வீரன்
கொடிமரமும் மண்டபமும்
தொங்கும் கல் சங்கிலி - ராஜ கோபுர மண்டபத்தின் அருகில்
அற்புத சிற்ப்பங்கள் கொண்ட பல தூண் மண்டபம்
தொங்கும் கல் சங்கிலி
மூலவர் விமானம்
கோவில் உட்புறம் உள்ள தூண்கள்
கூரை மண்டபம்
மலையில் ராஜ கோபுர காட்சி
மலையில் கொடி மரங்கள் காட்சி

தரிசனம் செய்த நாள் : 14.08.2017

Comments