Skip to main content

Printfriendly

Featured Post

October - 2017 (திருநெல்வேலி மாவட்ட கோவில்கள் ஸ்தல யாத்திரை)

நமது ஆலயங்கள்அறிவோம் ஆன்மீக அமைப்பு வருகின்ற October - 2017 மாதம் திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள புண்ணிய ஸ்தலங்கள் பயணம் செல்ல விருக்கின்றது.இரண்டு நாட்கள்.தேதி பின்னர் அறிவிக்கப்படும்.அனைத்தும் மிக விசேஷமான ஸ்தலங்கள்.இந்த ஆன்மீக வழிபாட்டு பயணத்தில் மிக பிரபலமான,பழமையான கோவில்கள் மற்றும் அதிகம் வெளி உலகம் அறியாத ஆனால் அதிக இறை அதிர்வலைகள் கொண்ட விசேச வரலாறுகள் கொண்ட கோவில்களும் அடங்கும். கோவில் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.பல கோவில்களின் உண்மையான வரலாறுகளும் அதன் சிறப்புகளும் ஒவ்வொரு கோவில்களில் விளக்கப்படும்.ஸ்ரீ அகஸ்தியர் தீர்த்தம்,மாத தாமிரபரணி(ஸ்ரீ லோபா முத்திரா) வில் புனித நீராடி அனைத்து இறை ஆலயங்களும் தரிசனம் செய்வோம். இந்த ஆன்மீக பயணத்தில் இரண்டு முக்கிய கோவில்கள் இடம் பெரும்.ராகு,கேது மற்றும் செவ்வாய் பகவானுக்கான சிறந்த அதிர்வலைகள் கொண்ட ஸ்தலங்கள்.இந்த கோவில்கள் அதிகம் வெளிஉலகம் அறிந்திடாத ஒன்று.ஆனால் இந்த இறை ஆலயங்களின் சிறப்பு அபரிமிதமானது. விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். புறப்படும் தேதி பின்னர் அறிவிக்

அஹோபிலம்(திருச்சிங்கவேள் குன்றம் - அடர்ந்த காடுகளில் ஒன்பது நரசிம்மர் - எம்பெருமான் ஸ்ரீ நரசிம்மர் தூணில் இருந்து வெளி வந்த அவதார இடம்)

Print Friendly and PDF
அஹோபிலம் - திருச்சிங்கவேள் குன்றம்

பல நாள் பிராத்தனை,ஏக்கம்,ஆவல் ஏன் தீராத தேடல் அஹோபிலம் செல்ல வேண்டும் என்பது.பழமையான கோவில்கள்  சென்று இறை தரிசனம் பெறவேண்டும் என்கின்ற ஏக்கம் ஆன்மீக தேடல் கொண்ட எல்லோருக்கும் இருப்பது இயல்பு. 1000 ஆண்டுகள்,3000 ஆண்டுகள் ஏன் 5000 ஆண்டுகள் கடந்த கோவில்களை பார்ப்பது என்பது எப்போதும் இறை தேடல் உள்ளவர்களுக்கு தனி சுகம் தான்.ஆனால் யுகங்கள் கடந்து இன்றும் எழும்பி நிற்கும் கோவில் என்றால் எவ்வாறு தரிசனம் செய்யாமல் இருக்க முடியும்.

பொதுவாக நாம் எதோ ஒரு கோவில் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வோம்?,அந்த கோவில் எங்கு உள்ளது, என்ன சிறப்பு அங்குள்ள் இறை மூர்த்திக்கு, என்ன தல வரலாறு என்று தெரிந்து கொண்டு செல்வோம்.அல்லது அந்த கோவில்களில் ஏதாவது பரிகாரம் செய்ய செல்வோம்.இது இயல்பு.ஆனால் ஒரே ஒரு தனிப்பட்ட கோவில் செல்ல வேண்டும் என்றால் அதற்க்கு முன்பாக நாம் சில மரபுகளை,சில இறை வழிபாடுகளை செய்து விட்டுச் சென்றால் தான் நாம் செல்ல விருக்கின்ற அந்த கோவிலில் உள்ள இறை அருள் மிக பரிபூரணமாக கிடைக்கும் என்றால் அந்த கோவிலின் சிறப்பை பற்றி என்ன சொல்ல.

ஆம் அப்படியாக யுகங்கள் கடந்து இன்றும் நமக்காக இறை ஸ்ரீ நரசிம்மர் ரூபம் கொண்டு காட்சி தரும் திருச்சிங்கவேள் குன்றம் என்கின்ற அஹோபிலம் தான் அந்த புனித ஸ்தலம்.பகவான் ஸ்ரீ நரசிம்மர் அவதாரம் எடுத்த திருத்தலம்.தனது பக்தன் பிரகலாதனுக்காக எம்பெருமான் நாராயணர் எடுத்த அவதாரம் தான் ஸ்ரீ நரசிம்மர் அவதாரம்.எம்பெருமான் அவதார காலங்களில் மிக குறைந்த அளவு நாளிகைகள் மட்டுமே கொண்ட அவதாரம்.அதி அற்புத அவதாரம்.

ஒருபுறம் கொடூர உருவம் கொண்டு இரன்னியனை வதம் செய்த அதே உருவம் தான் தனது தூய பக்தன் பிரகலாதனை அணைத்து அரவணைத்துக் கொண்டது.பகவான் எந்த உருவில் இருப்பினும் அவரது இதயம் கொண்டது அன்பு ஒன்றே அன்றோ.

சரி இனி இந்த புண்ணிய பூமிக்கு எப்படி செல்ல வேண்டும் என்றும் எவ்வாறு சென்றால் இறை அருள் மிக பரிபூரணமாக கிடைக்கும் என்றும் பார்ப்போம்.

முதலில் நாம் அஹோபில மலையை பற்றி தெரிந்து கொள்வோம்.மகா சர்ப்பமாக ஆதிசேசன் கிழக்கு மலை தொடராக படுத்திருக்கின்றார் என்பது ஐதீகம்.அவரது தலைப்பகுதி திருப்பதி,நீண்டு சுருங்கும் வால்பகுதி ஸ்ரீசைலம்.மத்திய உடல் பகுதி
தான் இந்த அஹோபிலம்.இந்த மூன்று கோவில்களும் ஒரு தொடர்ச்சி மலையில் உள்ளது என்பது வியப்பு.உண்மையான பக்தியும் உடளுருதியும் இருந்தால் மட்டுமே அஹொபிலத்தின் நவ நரசிம்மர்களை தரிசனம் செய்ய முடியும்.ஏன் என்றால் இந்த எம்பெருமான் கொண்ட அவதாரம் ஒரு தனி நபருக்காக உண்மையான பக்திக்கு எடுக்கப்பட்ட அவதாரம்.

சத்திய சொரூபமாக,மகாபுருஷனாக,நெருப்பின் உக்கிரத்தோடு நரசிம்மர் இங்கு ஒரு உயரமான குகையில் அமர்ந்துகொண்டு அருள்பாலிக்கின்றார்.

கருடன் தவம் செய்த மலை என்பதால் இம்மலைக்கு இன்றும் கருடாசலம் என்ற பெயர் உண்டு.பிற தெய்வங்களும்,தேவர்களும்,ரிஷிகளும்,சித்தர்களும் மட்டமே சென்று வழிபட்டு வந்த திருத்தலம் இன்று நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றம் பெற்று உள்ளது.

சரி இனி இந்த அஹோபில மலை பயணத்தை தொடங்குவோம்.மனதையும்,உடலையும் தயார் படுத்திக்கொண்டு இந்த புண்ணிய பயணத்தை தொடங்கிநோம்.இரண்டு நாள் பயணம்.

பயணத்தை தொடங்கும் முன்பு என்னென இடங்கள் இந்த புனித பூமியில் இருக்கின்றது என்பதை பாப்போம்.

அஹோபிலம் இரண்டு ஸ்தலங்களாக அமைத்து உள்ளது,அவை

 1. கீழ் அஹோபிலம்,
 2. மேல் அஹோபிலம்.

1.கீழ் அஹோபிலம் :

கீழ் அஹோபிலம் என்பது மலை அடிவாரம்.இங்குதான் அஹோபில மடம்,உணவு விடுதிகள்,தங்குவதற்கு வாடகை ரூம்கள்,கடைகள் உள்ளது.கீழ் அஹோபிலதில் தான் பிரகலாத வரதர் கோவில் உள்ளது.இந்த கோவில் நவ நரசிம்மர்களில் வராது.

இந்த பிரகலாத வரதர் கோவில் உள்ள இடம் தான் கீழ் அஹொபிலத்தின் மையப்பகுதி.கீழ் அஹோபிலத்தில் உள்ள இடங்கள்

1.பிரகலாத வரதர் கோவில் (கீழ் அஹோபில நரசிம்மர் கோவில்)

2.பார்கவ நரசிம்மர்(ஆறாவது நரசிம்மர் - கீழ் அஹோபிலத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம்)

3.சத்ரவட நரசிம்மர்(எட்டாவது நரசிம்மர் - கீழ் அஹோபிலத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம்)

4.யோகானந்த நரசிம்மர்(எழாவது நரசிம்மர் - எட்டாவது நரசிம்மர் - கீழ் அஹோபிலத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம்)

5.பாவன நரசிம்மர்(ஒன்பதாவது நரசிம்மர் -கீழ் அஹோபிலத்தில் இருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும்.ஜீப்பில் தான் செல்ல முடியும்.மேல் அஹோபிலத்தில் இருந்தும் செல்லலாம் நடை பயணமாக.சுமார் 7 கிலோமீட்டர் தூரம்.காட்டு பயணம் )


2.மேல் அஹோபிலம் :

மேல் அஹோபிலம் என்பது தான் கருடாத்திரி மலை என்று அழைக்கபடுகின்றது.மேல் அஹோபில மலையில் தான் இரன்னியனை வதம் செய்ய தூணைப் பிளந்து எம்பெருமான் நரசிம்மர் உருவம் கொண்டு வெளிவந்தார்.அந்த சக்தி உகத்தில் இருத்த இரன்னியனின் அரண்மனையையும்,பெருமான் வெளிவந்த தூணையும் இன்றும் காணலாம்.அந்த தூண் இந்த கலியுகத்தில் உக்கரஸ்தம்பம் என்ற பெயர் கொண்டு விண்ணை முட்டி நிற்கின்றது.அத்துணை பிரம்மாண்டம்.இந்த தூணின் அடியில் உள்ள குகையில் தான் ஜ்வால நரசிம்மராக ஆக்ரோஷம் கொண்டு இரண்யனை வதம் செய்யும் நிலையில் உள்ளார் எம்பெருமான்.இந்த அற்புதத்தை பின்னர் பாப்போம்.

மேல் அஹோபில மலையில் உள்ள இடங்களைப் பற்றி பார்ப்போம்.கீழ் அஹோபிலத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் மலைப்பயணம்.அணைத்து வாகனகளிலும் செல்லலாம்.மலை ஏறும் போதே அந்துனை அமைதி,ரம்மியம்.

1.கரஞ்ச நரசிம்மர்(மேல் அஹோபிலம் செல்லும் போது ரோட்டின் வலது புறம் உள்ளது)

2.அஹோபில நரசிம்மர்(மேல் அஹோபிலக் கோவில் மிக பழமையான கோவில்)

3.வரஹா நரசிம்மர்

4.ஜ்வாலா நரசிம்மர்(குகைக்கோவில் - உக்கரஸ்தம்பம் என்ற தூணின் அடியில் உள்ளது - நரசிம்மர் இரன்னியனை வதம் செய்த இடம்).இதன் அருகிலே ரத்தகுண்டம் என்ற ஊற்று உள்ளது.இரன்னியன் வதம் முடிந்த பின்பு எம்பெருமான் நரசிம்மர் தனது திருக்கரங்களை கழுவிய இடம்.இன்றும் சிவப்பாக உள்ளது.ஆச்சர்யம்.

5.மாலோல நரசிம்மர்

6.பிரகலாத மெட்டு அல்லது பிரகலாத மேடு(பக்த பிரகலாதன் வேதம் படித்த குருகுலம்.இன்றும் பிரகலாதன் திருக்கரத்தால் "ஓம் நமோ நாராயணா" என்று எழுதிய எழுத்துக்கள் இந்த குருகுல பாறைகளின் மீது உள்ளது.வியப்பின் உச்சம்.)

இனி பயணங்கள் தொடரும்..

கோவில் புகைப்படங்கள் :



அஹோபில நவ நரசிம்மர்கள்

நெடுஞ்சாலைஇல் இருந்து அஹோபிலம் செல்லும் பாதை

அடிவாரம் - ஊர் உள்ள பகுதி - பிரகலாத வரதர் கோவில் உள்ள இடம்

நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல்

பழமையான தூண்

தூணில் சித்தர்


பைரவ  மண்டபம் - இதன் பழமையை கண்டாலே தெரியும் யுகங்கள் கடந்த பூமி என்று


 மேல் அஹோபிலம்

Dholi  சேவை

கிழே உள்ள தீர்த்தம்

Dholi 

மேல் அஹோபில நரசிம்மர் கோவில்கள் செல்லும் படிகள்

திருமஞ்சன வைபோகம் நடைபெறும் மண்டபம்

மேல் அஹோபில கோவில் - 1.அஹோபில நரசிம்மர் - முதல் கோவில்











































































Comments