Skip to main content

Printfriendly

Featured Post

October - 2017 (திருநெல்வேலி மாவட்ட கோவில்கள் ஸ்தல யாத்திரை)

நமது ஆலயங்கள்அறிவோம் ஆன்மீக அமைப்பு வருகின்ற October - 2017 மாதம் திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள புண்ணிய ஸ்தலங்கள் பயணம் செல்ல விருக்கின்றது.இரண்டு நாட்கள்.தேதி பின்னர் அறிவிக்கப்படும்.அனைத்தும் மிக விசேஷமான ஸ்தலங்கள்.இந்த ஆன்மீக வழிபாட்டு பயணத்தில் மிக பிரபலமான,பழமையான கோவில்கள் மற்றும் அதிகம் வெளி உலகம் அறியாத ஆனால் அதிக இறை அதிர்வலைகள் கொண்ட விசேச வரலாறுகள் கொண்ட கோவில்களும் அடங்கும். கோவில் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.பல கோவில்களின் உண்மையான வரலாறுகளும் அதன் சிறப்புகளும் ஒவ்வொரு கோவில்களில் விளக்கப்படும்.ஸ்ரீ அகஸ்தியர் தீர்த்தம்,மாத தாமிரபரணி(ஸ்ரீ லோபா முத்திரா) வில் புனித நீராடி அனைத்து இறை ஆலயங்களும் தரிசனம் செய்வோம். இந்த ஆன்மீக பயணத்தில் இரண்டு முக்கிய கோவில்கள் இடம் பெரும்.ராகு,கேது மற்றும் செவ்வாய் பகவானுக்கான சிறந்த அதிர்வலைகள் கொண்ட ஸ்தலங்கள்.இந்த கோவில்கள் அதிகம் வெளிஉலகம் அறிந்திடாத ஒன்று.ஆனால் இந்த இறை ஆலயங்களின் சிறப்பு அபரிமிதமானது. விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். புறப்படும் தேதி பின்னர் அறிவிக்

திவ்ய தேசங்கள் தரிசனம்

Print Friendly and PDF
திவ்ய தேசங்கள்


எனது திவ்ய தேச பயணங்களின் தொகுப்பு "திவ்ய தேசங்கள் தரிசனம் " என்ற தலைப்பிற்கு கீழ் பதிவு செய்யப்படும்.அனைத்தும் இறையின் கருணை கொண்டே இயங்குகின்றது.திவ்ய தேச கோவில்கள் அனைத்தும் எதோ எழுப்ப பட்டன அல்ல.அந்த பரம்பொருள் எம்பெருமான் ஸ்ரீ நாராயணன் திருஉருவம் கொண்டு இந்த திவ்ய தேச கோவில்களில் இருந்து அருள்பாலிக்கின்றார்.

இந்த திவ்ய தேச கோவில்கள் அனைத்தும் எம்பெருமான் அவரை நோக்கி தவம் செய்த ரிஷி,முனிவர்கள்,சித்தர்கள் ஏன் அவரது பக்தர்களுக்காகவும் அந்தந்த ஸ்தலங்களில் தோன்றினார் என்பதே உண்மை.இந்த உண்மை யாது என்பதை அந்தந்த கோவில் கருவறையில் உள்ள மூலவ மூர்த்தியை கண்டாலே அறிந்து கொள்ளலாம்.திவ்ய தேச கோயில்களின் ஸ்தலவரலாறு என்பது நடந்த ஒன்றே.இதில் குழப்பம் வேண்டாம்.

திவ்ய தேச கோவில்களும்,கோவில் விமானங்களும்,கோயிலில் உள்ள புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தும் மகத்துவம் வாய்ந்தவை.

Comments

Popular Posts